கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் செல்வாகாந்தன்(49). இவர், அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தின்பண்டம் கொடுத்து கழிவறைக்குள் அழைத்துச் சென்று வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் ஆகினேஸ்மேரி விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில் செல்வாகாந்தன் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வாகாந்தனை ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.