ETV Bharat / state

'இந்திய-சீன எல்லை ஊடுருவல்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும்' - பிரதமர் மோடிக்கு கே எஸ் அழகிரி கண்டனம்

அண்மையில் நடந்த இந்திய - சீன எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறிய விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் முறையாக தெரிவிக்க பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 1, 2023, 10:35 PM IST

'இந்திய-சீன எல்லை ஊடுருவல்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும்'

கடலூர்: சிதம்பரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் நகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியின் கொடியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (ஜன.1) ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நாட்டு மக்களை மீட்கத் தான் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அரசியல் அதிகாரம் பெறுவதற்கு மட்டும் நடைபயணம் இல்லை. நாட்டினுடைய பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் சாதி, மதத்தின் பெயரால் பிரிந்து கிடக்கிறார்கள். ரூ.130 கோடி மக்களுக்கு வழிகாட்டுதலாக இந்த நடைபயணம் அமைந்துள்ளது.

பெட்ரோல் விலையும் சிலிண்டர் விலையும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ரூ.70-க்கு பெட்ரோல் கிடைத்தது. அன்று கச்சா எண்ணெய் விலை $108 அமெரிக்க டாலர். ஆனால், இன்று கச்சா எண்ணெய் விலை $70 அமெரிக்க டாலர். ஆனால், பெட்ரோல் விலை ரூ.100. இதற்கு மோடியிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. ரூ.400-க்கு பெண்களுக்கு சமையல் ஏரிவாயு, மன்மோகன் சிங் காலத்தில் வழங்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1200ஆக உள்ளது. இதற்கான காரணம் என்ன என்று கேட்டால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் உரிய பதில் சொல்ல முடியவில்லை.

பத்து வருடங்களுக்கு முன், மன்மோகன் சிங் செய்ததை ஏன் இன்று மோடியால் செய்ய முடியவில்லை. இந்த கேள்விக்கு இன்று வரை அவர்கள் பதில் சொல்லவில்லை. அதற்கு பதிலாக மோடி, சிறப்பாக ஆட்சி செய்வதாக பதில் சொல்கிறார். பண மதிப்பு இழப்பின் காரணமாக, அரசுக்கு மக்களுக்கும் எந்தப்பலனும் கிடைக்கவில்லை; கேடு தான் கிடைத்தது. ஜனநாயகத்தில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

காஷ்மீர் விவகாரம்: இதுதான் தங்கள் கடமை என்றும் காஷ்மீரில் மக்களின் உரிமையை பாதுகாத்தோம் என்றும் கூறுகின்றனர். ஆனால், இன்று மோடி அரசு, மூன்று மாநிலங்களாக காஷ்மீரை உடைத்துவிட்டார். இதனால், காஷ்மீருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை; மக்களுக்கும் எந்த லாபமும் கிடைக்கவில்லை. இந்தியாவிற்கும் எந்த லாபமும் கிடைக்கவில்லை.

இந்திய -சீன எல்லையில் நடப்பதென்ன?: சீன எல்லையில் பிரச்னை இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எல்லையில் என்ன பிரச்னை என்று கேட்பார் எனில், அங்கு நாட்டின் பிரச்னையை பற்றி விளக்கி சொல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எல்லையில் என்ன நடக்கிறது? என்பதை பற்றி நாடாளுமன்றத்தில் முறையாக தெரிவிக்க வேண்டும். சீனர்கள் ஆக்கிரமிப்பு செய்வதாகப் பல்வேறு செய்திகள் வருகிறது. ஆனால், இந்திய ஊடகங்கள் வாய் மூடி கிடக்கிறது. நாடாளுமன்றத்தில் அதை தெளிவுபடுத்த வேண்டும்' என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சித்தார்த்தன், சிதம்பரம் நகர தலைவர் மச்சின், கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில்நாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், ஐஎன்டிசி மாநிலச் செயலாளர் நல்லுசாமி, நகர செயல் தலைவர் குமார், மாவட்ட செயலாளர் நெல்சன் தங்கராஜ் என ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு:இந்தியாவை யாராலும் கைப்பற்ற முடியாது - அமித்ஷா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.