கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தின் கோரணபட்டு ஊராட்சி மொத்தம் ஒன்பது வார்டுகளை உள்ளடக்கியது. இதில், முதலாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகன், இந்திராணி, சீனிவாசன் ஆகிய மூன்று வேட்பாளர் போட்டியிட்டனர்.
இதனிடையே, வேட்பாளர் முருகன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறி கடந்த இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், சதீஷ்குமார் தலைமையில் மறுவாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
அதில், முதலாவது வார்டில் மொத்தம் 331 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின், மறுவாக்கு எண்ணிக்கையில் சாவி சின்னத்தில் போட்டியிட்ட முருகன் 153 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். மற்ற வேட்பாளர்களான இந்திராணி 109 வாக்குகளும், சீனிவாசன் 56 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.
இதையும் படிங்க: