ETV Bharat / state

நெய்வேலியில் கலைஞரின் வெண்கலச் சிலை திறப்பு

கடலூர்: நெய்வேலி தொ.மு.ச அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

author img

By

Published : Sep 18, 2020, 4:23 AM IST

kalaignar
kalaignar

கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நெய்வேலி தொ.மு.ச அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள, மறைந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை (செப்.17) காணொலி வாயிலாக சென்னையிலிருந்து திறந்துவைத்தார்.

முன்னதாக, சிலை திறப்பு விழாவையொட்டி நெய்வேலி நகரம் முழுவதும் திமுக கொடி மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான கணேசன் தலைமையில், நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா ராஜேந்திரன் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், நெய்வேலி தொமுச பொதுச்செயலாளர் சுகுமார், தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் புவனகிரி, சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் உள்பட ஏராளமான கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:அடுத்துவரும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் - மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.