கடலூர்: திருப்பாதிரிப்புலியூரில் திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நேற்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, "1929ஆம் ஆண்டு பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது, திராவிடர் கழகம்.
அந்த தீர்மானத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சட்டமாக மாற்றினார். திராவிடர் கழகம் அமைத்த அடித்தளத்தால் இன்று சாமானியர்களும் பதவி வகித்து வருகின்றனர். திராவிட மாடல் ஆட்சி குறித்து உலகம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர். குலக்கல்வித் திட்டத்தின் மறு உருவமாக நீட் வந்துள்ளது.
மேலும், சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்பதை மாற்றியது நீதிக் கட்சி. அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூக நீதி. நீட் தேர்வு அரசியல் சட்டத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க 100 ஆண்டுகளானாலும் பாஜகவால் முடியாது என்று ராகுல் காந்தி கூறியது முழு உண்மை. மோடி ஆட்சியில் மதிப்பெண் மதிப்பு இல்லாத எண்ணாக மாறிவிட்டது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தி எதிர்ப்பின் வரலாறு தெரியுமா..? அமித்ஷாவின் கருத்துக்கு கனிமொழி கண்டனம்...