கடலூர் மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் (ஜெயப்பிரியா) தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்குத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 50 கிளைகள் உள்ளன. அது மட்டுமன்றி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பள்ளிகள் மற்றும் திரையரங்குகள், தங்கும் விடுதிகள் போன்றவையும் உள்ளது.
சில தினங்களுக்கு முன் அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் நெய்வேலியில் உள்ள தலைமை அலுவலகம், கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், வேப்பூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான பள்ளி, திரையரங்கு, தங்கும் விடுதிகள் போன்றவற்றில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இதனிடையே, வருமான வரி சோதனையில் ரூபாய் 242 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது 12 கோடி ரூபாயும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நிதி நிறுவன உரிமையாளர் ஜெய்சங்கர் 2014 ஆம் ஆண்டு தேமுதிக கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்: மைக்கைப் பிடுங்கி திமுகவினர் அடாவடி