மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு கட்டப் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சில இடங்களில் துப்பாக்கிச் சூடு, தடியடி என நாடே போராட்டக் களமாக மாறியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான, ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் ஒரு காவலர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடலூரில் இந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்: கடையநல்லூரில் 6 வழக்குகள் பதிவு