ETV Bharat / state

ஆளும் வர்க்கத்தினால் கட்டமைக்கப்படும் அரக்கர்கள்: கடலூரில் முதன்முறையாக கால்பதித்த இரணியன்...! - பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய இரணியன் நாடகம்

கடலூர்: பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய இரணியன் நாடகம் சென்னை, புதுச்சேரிக்கு பிறகு தற்போது கடலூரில் முதன்முறையாக அரங்கேறியுள்ளது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

cuddalore
author img

By

Published : Sep 22, 2019, 1:44 PM IST

பாவேந்தர் பாரதிதாசன் எழுதி தந்தை பெரியார் தலைமை ஏற்று நடத்திய 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்ற தமிழ் நாடகம் 1934ஆம் ஆண்டு முதன்முறையாக சென்னையில் அரங்கேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து சுதந்திரத்திற்கு பிறகு இந்த நாடகம் சென்னையிலும் புதுச்சேரியிலும் சேர்த்து மொத்தம் நான்கு முறை அரங்கேற்றப்பட்டது.

அரக்கர்கள் உருவாவதில்லை; ஆளும் வர்க்கத்தினால் அரக்கர்களாக கட்டமைக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், நாடக இயக்குநர் ராமசாமி முயற்சியில் ஆறாவது முறையாக கடலூர் மாவட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் நகர அரங்கில் நேற்று இரணியன் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

கடலூரில் அரங்கேறிய இரணியன் நாடகம்

மேலும், 'அரக்கர்கள் உருவாவதில்லை, மாறாக தன் இனம், பண்பாட்டில் ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கு எதிராக செயல்படும் நபர் ஆளும் வர்க்கத்தினால் அரக்கர்களாக கட்டமைக்கப்படுகிறார்கள்' என்பதுதான் இந்நாடகத்தின் மையக்கருத்து.

இதையும் படிங்க: இயல் இசை நடனத்துடன் பாரதி யார்? நாடகம் - ஆவலுடன் ரசித்த மக்கள்

Intro:பாவேந்தர் பாரதிதாசன் எழுதி தந்தை பெரியார் தலைமை ஏற்று நடத்திய இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற தமிழ் நாடகம் கடலூரில் முதன்முதலாக இன்று நடத்தப்பட்டது இதை ஏரளாமானோர் ரசித்தனர் Body:கடலூர்
செப்டம்பர் 22,

புராணங்களில் கொடிய அரக்கனாகவும் கொலைக்கஞ்சதா கொடும்பாதகனாகவும் சித்தரிக்கப்பட்ட இரணியனை கதைத்தலைவனாகக் கொண்டு பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் தந்தை பெரியார் தலைமையில் 1934 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் முதன் முறையாக மேடையேற்றப்பட்டது இந்த நாடகத்தின் அச்சுபிரதியையும் தந்தை பெரியார் தனது குடியரசு பதிப்பகத்தின் மூலம் 1939 இல் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் இந்த நாடகம் சுதந்திரக்கு முன்பும் பின்பும் தடையை மீறி திராவிட இயக்கத்தினரும் பெரியாரின் தொண்டர்களாலும் பலமுறை மேடையேற்றப்பட்டது.

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தை தனது அரங்க படைப்பாக இயக்குனர் ராமசாமி புதிய எழுச்சியோடும் மாறுபட்ட அரங்க வடிவமைப்பு தற்போது நடத்திக் கொண்டு வருகிறார்

கடலூர் மாவட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் நகர அரங்கில் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற தமிழ் நாடகம் நடத்தப்பட்டது. இந்த நாடகம் இரணியன் என்ற புராணப் பாத்திரத்தை மருவாசிப்புக்கு உட்படுத்ததோடு மட்டுமின்றி பண்பாட்டு படையெடுப்புகள் இன ஆதிக்கம் வஞ்சக சூழ்ச்சிகள் துரோகங்கள் என மானுட சமூகத்தின் சமூக வாழ்வையும் சுயமரியாதை சிந்தனையும் குறித்தும் பல்வேறு அம்சங்களின் மீது விமர்சனப் பார்வை கூறுகிறது அரக்கர்கள் உருவாவதில்லை மாறாக தமது இனம் மற்றும் பண்பாட்டு ஆதிக்கத்திற்கு ஆளும் வர்க்கத்தினால் அவர்கள் அரக்கர்களாக கட்டமைக்கப் படுகிறார்கள் என்ற உண்மையும் இந்த நாடகம் சொல்கிறது மேலும் இரணியன் திராவிட இன வழியில் வந்த மாவீரன்; அவன் ஆரிய நாகரிகத்தையும் மதநெறியையும் எதிர்த்துப் போரிட்டு மடிந்தவன் என்னும் கருத்துகளை மையமாக்கி இந்நாடகம் எழுதப்பட்டுள்ளது. ‘குறிஞ்சித் திட்டு’ நூல் போல, இந்நாடகமும் ஆரியரின் படையெடுப்பு, தமிழ் நாகரிகத்தைச் சிதைத்த பாங்கினை உணர்த்துகிறது.

இந்த நாடகம் சென்னையிலும் புதுச்சேரியிலும் இதுவரை 5 முறை மேடையேற்றப்பட்டுள்ளன இந்நிலையில் கடலூரில் முதன்முறையாக இந்த நாடகம் நடைபெற்றது

இதை காண அரங்க செயற்பட்டார்களும் பெரிய திராவிட இயக்க ஆர்வலர்களும் மாணவர்களும் இளைஞர்களும் என ஏராளமானோர் வந்து இதனை ரசித்துப் பார்த்தனர்

இதில் கலந்து கொண்டவர்கள் தமிழகம் முழுக்க இந்த நாடகத்தை கொண்டு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்

பேட்டி ; 1) ராமசாமி - இயக்குனர்
2) முருகானந்தன் - பார்வையாளர்
3) செம்மதி - பார்வையாளர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.