ETV Bharat / state

வேட்டை நாய் கடித்து தொழிலாளி உயிரிழப்பு! - In cuddalore, man killed due to dog bite news

கடலூர்: சிதம்பரத்தில் பண்ணை வீட்டில் வளர்க்கப்படும் வேட்டை நாய் கடித்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

வேட்டை நாத்து கொதறியதில் தொழிலாளி உயிரிழப்பு!

author img

By

Published : Jan 13, 2021, 3:11 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கனகசபை நகரைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம். காங்கிரஸ் பிரமுகரான இவருக்கு சொந்தமான பண்ணை புதுபூலாமேட்டில் கிராமத்தில் உள்ளது. இந்த பண்ணையில் கடந்த ஏழு வருடங்களாக வல்லம்படுகையை சேர்ந்த ஜீவானந்தம் (54) என்பவர் வேலை பார்த்துவருகிறார். விஜயசுந்தரத்துக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் இரண்டு வேட்டை நாய்களை அவர் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நாய்களுக்கு இன்று (ஜன. 13) மதியம் உணவு வைப்பதற்காக ஜீவானந்தம், உணவை எடுத்துக்கொண்டு வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்வீலர் என்ற இனத்தைச் சேர்ந்த நாய் ஜீவானந்தத்தை கடித்து குதறியது. இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த, சிதம்பரம் தாலுகா காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாய் உரிமையாளர் விஜயசுந்தரத்திடம் விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க...விவசாயம் தொழிலல்ல; வாழ்க்கை முறை - டிடிவி பொங்கல் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.