ETV Bharat / state

கடலூரில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சிய 13 நிறுவனங்களுக்கு சீல்! - நிலத்தடி நீர் உறிஞ்சும் நிறுவனங்கள்

கடலூர்: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சிய 13 நிறுவனங்களுக்கு, அதிரடி நடவடிக்கையாக கடலூர் மாவட்ட நிர்வாகத்தினர் சீல் வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனத்திற்கு சீல்  நிலத்தடி நீரை உறிஞ்சிய நிறுவனத்திற்கு சீல்  illegal ro water plant seal by govt officials  நிலத்தடி நீர் உறிஞ்சும் நிறுவனங்கள்  கடலூர் மாவட்டச் செய்திகள்
கடலூரில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சிய 13 நிறுவனங்களுக்கு சீல்
author img

By

Published : Feb 28, 2020, 12:38 PM IST

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி, விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவேண்டும், வர்த்தகப் பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் கண்காணிக்க குழுக்களை அமைக்கவேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்பேரில் வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத் துறை, பொதுப்பணித்துறை (நிலத்தடி நீர்) உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களை கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.

கடலூரில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சிய 13 நிறுவனங்களுக்கு சீல்

ஆய்வில், கடலூர் சிங்கரிகுடி, திருவந்திபுரம், எம்.புதூர், அரிசிபெரியாங்குப்பம், ராமாபுரம், வழிசோதனை பாளையம், கண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் 13 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. இதன்பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் உத்தரவின் பேரில், கடலூர் வட்டாட்சியர் செல்வக்குமார் தலைமையில், சென்ற அரசு அலுவலர்கள் அந்த 13 நிறுவனங்களுக்கும் சீல் வைத்தனர்.

இதனால் வணிக நிறுவனங்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் உணவகங்கள் மற்றும் தண்ணீர் கேன் உபயோகிக்கும் வீடுகளில் சில தினங்களுக்கு தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல்முறையாக திருநங்கைகள் நடத்தும் ஆவின் மையம் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.