ETV Bharat / state

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : சிதம்பரத்தில் ஐ.ஜி.நாகராஜ் ஆய்வு! - nivar storm in cuddalore

கடலூர் : சிதம்பரத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

ig-nagarajan-precautionary-
ig-nagarajan-precautionary-
author img

By

Published : Nov 24, 2020, 4:56 PM IST

நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் அரசு அலுவலர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, இன்று (நவ.24) சிதம்பரம் திட்டுக்காட்டூர், பெராம்பட்டு, மேலகுண்டலபாடி உள்ளிட்டப் பகுதிகளில், வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ், சிதம்பரம் உதவி சார் ஆட்சியர் மதுபாலன் பாதுகாப்பு மையங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது பொதுமக்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து எம்ஜிஆர் திட்டு, சாமியார்பேட்டை, சின்னூர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் அலுவலர்கள் ஆய்வை மேற்கொள்கிறார்.

இதையும் படிங்க: தாழ்வானபகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க ஆட்சியர் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.