ETV Bharat / state

டிக் டாக் மோகம்: மனைவியைக் கொன்ற கணவர் - டிக் டாக் கொலை

கடலூர்: டிக்- டாக் மோகம் கொண்ட மனைவியின் தலையில், அவரது கணவர் ஆட்டுஉரலை தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி கொலை  டிக் டாக் மோகம் மனைவி கொலை  husband killed his wife because she have intersted in tic tok  husband killed his wife  Panruti wife murder  Panruti tik tok murder  டிக் டாக் கொலை  டிக் டாக பண்ரூட்டி கொலை
டிக் டாக் மோகம் கொண்ட மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கணவன்
author img

By

Published : Feb 17, 2020, 5:09 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்த குமரவேல்(27). இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜேஸ்வரி(25) என்பவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு வர்ஷினி(6), ராகுல்(4) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி அன்வர்ஷா நகர் நான்காவது தெருவில் குமரவேல் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து ரத்தம் வெளியே வழிந்தபடி இருந்துள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவலளித்தனர். இதன்பின்பு விரைந்து வந்த காவல் துறையினர், குமரவேலின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

டிக் டாக் மோகம் கொண்ட மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கணவன்

காவல் துறையினர் ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில், ராஜேஸ்வரி டிக்-டாக் மோகத்தில் சில ஆண் நண்பர்களுடன் வீடியோக்களை எடுத்து டிக்-பதிவிட்டுள்ளார். மேலும், அவர் சில ஆண் நண்பர்களிடம் செல்ஃபோனில் தொடர்ச்சியாக பேசியும் வந்துள்ளார். இது குமரவேலுக்குப் பிடிக்கவில்லை.

அதேசமயம் குமரவேல் சில திருநங்கைகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்த ராஜேஸ்வரி குமரவேலைக் கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், காதலர் தினத்தன்று காலையில் வீட்டை விட்டு ராஜேஸ்வரி வெளியே சென்று விட்டு இரவில்தான் வீடு திரும்பியுள்ளார்.

அன்றைய தினமும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பின்பு அன்றிரவு ராஜேஸ்வரி தூங்கிக்கொண்டிருக்கும்போது, குமரவேல் இரும்பு கம்பியால் ராஜேஸ்வரியை அடித்தும் ஆட்டுஉரலை தலையில் தூக்கி போட்டும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பின்னர் போலீஸிடம் சிக்கிக்கொள்வோம் என்று எண்ணிய குமரவேல், தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காடாம்புலியூருக்கு சென்றுள்ளார். அங்கு, அவரது தாய்வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதன்பின்பு அவரை போலீசார் வலை வீசி தேடிவந்த நிலையில், காடாம்புலியூரில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார். தற்போது, அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுவன் சரமாரியாக குத்திக் கொலை - போலீசார் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.