கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள, சி. தண்டேஸ்வரநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சண்முகம். இவர் நேற்றிரவு (ஜூலை 2) வழக்கம் போல் தனது வீட்டில் மனைவி இன்ப வள்ளியுடன் உறங்கியுள்ளார்.
அப்போது திடீரென வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இருவரும் படுகாயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள், இவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 3) பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து சிதம்பரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடலூரில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்த இரண்டு இளைஞர்கள் கைது!