ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்... பொதுமக்களின் கருத்தை கேட்கும் அறநிலையத்துறை...

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக பொதுமக்களும், அமைப்புகளும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

அறநிலையத்துறையின் நாளிதழ் விளம்பரம்
அறநிலையத்துறையின் நாளிதழ் விளம்பரம்
author img

By

Published : Jun 12, 2022, 1:21 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப்புகழ் பெற்றது. இந்த கோயிலை திட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், அறநிலையத்துறை சார்பாக 5 பேர் கொண்ட குழு, ஆய்வு மேற்கொள்ள கோயிலுக்கு சென்றது.

இதற்கு தீட்சிதர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் குழுவினர் திரும்பிச் சென்றனர். இதேபோல 2ஆவது நாளாக ஆய்வுக்கு சென்றபோதும் வரவு, செலவு கணக்குகளை காண்பிக்காமல், செயல் அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து, அறநிலையத்துறை ஆணையர் சுகுமாரன், "இரண்டு முறை, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றோம்.

திட்சிதர்கள் தரப்பில் எந்தயொரு ஒத்துழைப்பும் தரப்படவில்லை. வரவு, செலவு கணக்குகள் குறித்து எந்த தகவலும் சேகரிக்க முடியவில்லை" எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக, பொதுமக்களும், அமைப்புகளும் தங்களுடைய கருத்துக்களை மனு மூலம் தெரிவிக்கலாம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் என்று அறநிலையத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதோடு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறையினர் ஆய்வுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.