கடலூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக தாழங்குடா கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன் (39) என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் கடந்த மாதம் 1ஆம் தேதி இரவு வெட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்து புதுநகர் காவல் ஆய்வாளர் உதயகுமார் விசாரணை மேற்கொண்டார். அதில் 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
![குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cdl-01-kundass-arrested-photo-script-7204906_06092020190233_0609f_1599399153_9.jpg)
இதில் முகிலன் (37), சிவசங்கர் (36), அரசகுமார் (30), மதன் (38), மதியழகன் (45), வேலு (45), தங்கத்துரை (58), சூர்யா (22), இளவரசன் (38), வீரபாண்டியன் (36) ஆகிய 10 பேர் மீது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 10 பேரும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவர் கொலை - மனைவிக்கு போலீஸ் வலை