கடலூர்: பண்ருட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் பாண்டியன் (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பின் தொடர்ந்து அவரைக் காதலிப்பதாக கூறி தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து அவரை மகளிர் காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து பிணையில் வெளியே வந்த பாண்டியன் மீண்டும் அதே சிறுமியிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மிரட்டி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
தற்கொலைக்கு தூண்டல்
கடந்த ஆக.2ஆம் தேதி அன்று சிறுமியை நேரில் சந்தித்த பாண்டியன், நீ இல்லை எனில் நான் விஷம் குடித்து இறந்துவிடுவேன், இல்லை நீ விஷம் குடித்து இறந்த போ என கூறி அந்த விஷத்தை சிறுமியிடம் கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி விஷத்தை வாங்கி குடித்துள்ளார்.
சிறுமி உயிரிழப்பு
இதையடுத்து சிறுமி ஆபத்தான நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் விஷம் கொடுத்த பாண்டியன் மீது போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையி்ல் நேற்று சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டியனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது