ETV Bharat / state

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும்: அமைச்சர் கணேசன்

பத்தாயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

10,000 கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு தலா 4 லட்சம் முற்றிலும் இலவசம் - சி.வி. கணேசன்

author img

By

Published : Jan 3, 2023, 11:23 AM IST

10,000 கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு தலா 4 லட்சம் முற்றிலும் இலவசம் - சி.வி. கணேசன்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கடலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நேற்று (ஜனவரி 2) நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன்.குமார், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரை செல்வன் உள்ளிட்ட கலந்து கொண்டனர். மொத்தமாக 3,433 கட்டுமான தொழிலாளர்களுக்கு 26 லட்சத்தி 15 ஆயிரத்து 755 ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களும், 1052 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி திருமணம் உதவி இயற்கை மரணம் நிவாரணம் உதவி என 24 லட்சத்தி 23 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், 10 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவைக் கண்டிருந்த தொழிலாளர் நல வாரியம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் அமைப்புசார உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வலியுறுத்ததன் பெயரில் இந்த மாவட்டத்தில் மட்டும் 21 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் இதுவரை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக பத்தாயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு தல 4 லட்சம் இலவசமாக வழங்கப்படும். அதற்காக 400 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம் சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.