ETV Bharat / state

கடலூரில் அரிய வகை வெளிநாட்டுப் பறவைகள்!

கடலூர் மாவட்டத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளன. அவற்றை பார்வையிட பறவைகள் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வம் காண்பித்த வண்ணம் வருகை தருகின்றனர்.

European bee eater
வெளிநாட்டுப் பறவைகள்
author img

By

Published : Jan 28, 2022, 3:42 PM IST

கடலூர்: வனக்கோட்டத்திற்குள்பட்ட கடலோரப் பகுதிகளில் இன்றும் (ஜன.28), நாளையும் (ஜன.29) பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியில் கடலூர் வனச்சரக அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணி மாவட்ட வன அலுவலர் செல்வம் உத்தரவின்பேரில் நடைபெறுகிறது. வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீத், வனவர் குணசேகரன், பறவைகள் ஆர்வலர் சுவாமிநாதன், குழந்தைகள் மருத்துவர் இளந்திரையன் மற்றும் தன்னார்வ குழு ஹெல்ப் டுடே நிறுவனர் செல்லா, பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடலூரில் அரிய வகை வெளிநாட்டுப் பறவைகள்

முதல் நாள் கணக்கெடுப்பின் போது, 50க்கும் மேற்பட்ட அரிய வகை வெளிநாட்டுப் பறவைகள் இப்பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. இப்பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு வந்துள்ளன என பறவைகள் நல ஆர்வலர்கள் மற்றும் வன அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கணக்கெடுப்பில் காணப்பட்ட மஞ்சள் பில்ட் பாப்லர் (yellow billed babbler) என்னும் பறவை இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் வசிக்கும் ஒரு பறவை இனமாகும். சுடலைக் குயில் அல்லது கொண்டைக் குயில் (Jacobin Cuckoo or Pied Cuckoo – Clamator jacobinus) என்னும் பறவை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்படும் பறவை இனங்கள்.

நீல முகப் பூங்குயில்கள் (Blue faced malkoha) பூங்குயில் இனத்தில் உள்ள ஒரு வகை பறவையாகும். இவ்வினம் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் காணப்படுகிறது.

மேலும், கௌதாரி ,சிட்டுக் குருவி பச்சைக் கிளி ,ரெட்டை வால் குருவி, மரங்கொத்தி, ஆந்தை, மயில், கொக்கு வகைகள் உள்பட பல்வேறு வகையான பறவைகளை மாணவர்கள், குழந்தைகள் தொலைநோக்கி மூலம் பார்த்து ரசித்தனர்.

இதையும் படிங்க: கடலோர மாவட்டங்களில் மிதமான மழை- சென்னை வானிலை மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.