கடலூர் மாவட்டத்தில் இன்று (அக்.05) காலையில் இருந்து மழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் அடுத்த சாமியார்பேட்டைப் பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுவிட்டு, கரை திரும்பி வலைகளை உலர வைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் பாலகிருஷ்ணன் என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இதில் பலத்த காயமடைந்த ராமலிங்கம் என்ற மீனவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இச்சம்பவத்தில் இதே பகுதியைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சத்திரம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு; இருவர் படுகாயம்