ETV Bharat / state

லஞ்ச பணத்தில் வீடுகள் வாங்கி குவித்த பெண் சார் பதிவாளர்.. சிக்கியது எப்படி? - இன்றைய முக்கிய செய்திகள்

Cuddalore Female sub-registrar arrested for bribe: விருத்தாசலம் சார் பதிவாளர், பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடம் பெற்ற லஞ்ச பணத்தில் கோடிக் கணக்கு மதிப்பிலான, வீட்டு மனைகளை வாங்கி இருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Female registrar taking bribe issue
லஞ்சம் பெற்று வீட்டு மனைகளை வாங்கி குவித்த பெண் சார் பதிவாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கியது எப்படி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 5:10 PM IST

கடலூர்: விருத்தாசலம் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று (ஆக.31) அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில், பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முதற்கட்டமாக, கணக்கில் வராத 3.50 லட்சம் ரூபாய் பணம் இருப்பதைக் கண்டறிந்து, அது தொடர்பாக சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் உதயகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கைப்பற்றப்பட்ட பணம், நிலங்களைப் பதிவு செய்ய வந்தவர்களிடம் இருந்து பெற்ற லஞ்சப் பணம் என்பது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் விருத்தாசலம் சார் பதிவாளர் சங்கீதா, நாள்தோறும் அலுவலகத்திற்குப் பத்திரப்பதிவு செய்வதற்கு வரக்கூடிய பொதுமக்களிடம் வாங்கப்படும் லஞ்சப் பணத்தை இரண்டு அல்லது மூன்று லட்சமாகச் சேர்த்து உளுந்தூர்பேட்டையில் உள்ள திருப்பதி திருமலை நகரில் 10க்கும் மேற்பட்ட வீட்டு மனைகளை வாங்கியுள்ளதாகவும், அதற்காக, தான் வாங்கிய லஞ்சப் பணத்தை Goole pay மற்றும் bank transfer மூலமாக ரூபாய் 42 லட்சம் வரை சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு அனுப்பியதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக நேற்று (ஆகஸ்ட் 31) ரியல் எஸ்டேட் நில உரிமையாளரிடம் கொடுக்க வைத்திருந்த லஞ்சப் பணமான 3.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையின் போது கைப்பற்றினர். மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த புரோக்கர் உதயகுமாரையும் விசாரணை செய்தனர். சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதற்குப் பிறகு, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், "முதற்கட்டமாகக் கூறிய 3.50 லட்சம் ரூபாயுடன் சேர்த்து மொத்தமாக 8.10 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று (செப் 1) கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் சார்பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் உதயகுமாரிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விசாரணை முடிவிலேயே இவர்கள் மீது வழக்கு தொடரப்படுமா? அல்லது கைது செய்ய கூடுமா? என தெரியவரும் என்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.. கேஸ் விலை குறைப்பை சாடிய கே.எஸ்.அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.