ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு - போலி பேஸ்புக் கணக்கு

கடலூர்: மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

fake Facebook account was started in the name of Cuddalore District Collector

author img

By

Published : Dec 16, 2020, 3:48 PM IST

கடலூர் மாவட்ட ஆட்சியராக செயல்பட்டு வருபவர் சந்திரசேகரன் சகா மூரி. இவரது பெயரில் Chandrasekhar sakhamuri IAS என்ற பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு இதில் பல்வேறு தகவல்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சமூகவலைதள கணக்கு மாவட்ட ஆட்சியர் பெயரில் இருப்பதால் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தி, அவரது புகைப்படங்களையும் பதிவு செய்வதாக பலர் குற்றஞ்சாட்டினர்.

எனவே, இந்த போலி பேஸ்புக் கணக்கு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.