கடலூர்: தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. னைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முன்னணி மற்றும் முடிவுகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாநகராட்சி புனித வளனார் பள்ளி மையத்தில் மின்னனு இயந்திரம் வைக்கப்பட்ட அறையின் சாவி தொலைந்துவிட்டது. இதனால் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் வீதியில் நின்று கொண்டிருக்கின்றனர். சாவி கிடைக்காததால் வாக்கு எண்ணுவது தாமதம் ஆனது. அதிகாரிகள் சாவியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திறக்கப்பட்ட கதவு!
சுமார் அரை மணி நேரம் கழித்து பூட்டு அறுக்கப்பட்டு திறக்கப்பட்டது. பின்னர் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.
இதையும் படிங்க:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில அளவில் கட்சிகளின் வெற்றி நிலவரம்