கடலூர் மாவட்டத்தில் புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய அரசின் இந்தி, சமஸ்கிருத மும்மொழி கொள்கையைக் கைவிட வேண்டும், 3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும், ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை கொண்டுவரவிருக்கும் செமஸ்டர் தேர்வு முறையை ரத்துசெய்ய வேண்டும், கலை, அறிவியல் கல்லூரிக்காப தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுநல இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார், அச்சக உரிமையாளர் கார்த்திகேயன், முற்போக்கு மாணவர் சங்கம் மாணிக்கராஜ், முற்போக்காளர் சங்கம் பாலசுப்ரமணியன், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி பூங்குழலி, உறுப்பினர்கள் வெங்கடேசன், ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.