கடலூர்: சிதம்பரம் காசு கடை தெரு பகுதியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தலைக்கேறிய மது போதையில் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முடியாமல் சாய்ந்து சாய்ந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிதம்பரம் அம்பேத்கர் தெரு பகுதியைச் சார்ந்தவர் சந்துரு. இவர் கஞ்சிதொட்டி, குதிரை வண்டி ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் காசுகடை தெரு பகுதியில் ஆட்டோவை எடுத்து வந்துள்ளார். அப்போது தானாக நின்ற ஆட்டோவை மீண்டும் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்துள்ளார்.
அப்போதுதான் அவரின் நடவடிக்கை அருகில் இருந்தவர்கள் பார்வைக்கு தென்பட்டது, அவர் அதிகளவு மது போதையில் இருந்ததும் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முடியாமல் பலமுறை முயற்சி செய்து கொண்டிருந்தபோது தலைக்கறிய மது போதையால் ஆட்டோ ஷ்டேரிங்கில் சாய்ந்துள்ளார்.
மேலும், அவர் ஆட்டோவை சில மணி நேரங்களுக்கு பிறகு ஸ்டார்ட் செய்து அதிவேகமாக சென்றது அங்குள்ள பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருகில் பள்ளி வளாகம் இருப்பதால் விபத்து ஏற்படும் என்ற அச்சம் அனைவருக்கும், ஆனால் எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படாமல் அங்கிருந்து ஆட்டோ சென்றது.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற மது போதையில் வாகனத்தை இயக்கும் ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கடலூரில் ஜெய்லர் படப்பிடிப்பு தொடக்கம்