கரோனா வைரஸ் தொற்று உலகத்தை அச்சுறுத்திவருகிறது. இந்தியாவிலும் வைரஸின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. கரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இரண்டு லட்சம் பேருக்கு முகக்கவசம் தேவைப்படுகிறது. ஆனால் கையிருப்பு 50,000 மட்டும் உள்ளது. எனவே n95 மாஸ்க் எப்படி சுழற்சி முறையில் உபயோகிப்பது என்பதை கடலூரைச் சேர்ந்த நுரையீரல் நிபுணர் பாலக் கலைக்கோவன் விளக்கினார். அதில் சாதரண மாஸ்க்கை உபயோகிக்கக்கூடாது என்றும், n95 மாஸ்க்கை மூன்று நாட்களுக்கு ஒரு முறை உபயோகிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கரோனா வைரஸ்!