இந்து மனுதர்மம் பெண்ணடிமைத்தனம், சூத்திர இழிவு உள்ளிட்டவற்றை பாதுகாப்பதாக கூறி திராவிட கழகத்தினர் தமிழகம் முழுவதும் இந்து மனுதர்ம நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் திராவிடர் கழகத்தினர் 35 க்கும் மேற்பட்டோர் கடலூர் பெரியார் சிலைக்கு அருகில் இந்து மனுதர்ம நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயன்றதால் இருதரப்பினரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடிபட்ட அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.


பின்னர் அவர்களிடமிருந்த மனுதர்ம நகலை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். திராவிட கழகத்தினரின் திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.