ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக ஆக்க கோரி இயக்குநர் கௌதமன் மனு - சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக ஆக்க கோரி இயக்குநர் கௌதமன் மனு

chidambaram nataraja temple : சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக்கக்கோரி  தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் மற்றும் சிவபக்தர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்தார்.

c
c
author img

By

Published : Nov 24, 2021, 5:14 PM IST

கடலூர்: தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் Director Gauthaman இன்று (நவ.24) கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தை சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " உலகப் புகழ்பெற்ற கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்களை தீட்சதர்கள் அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்களது சொகுசு வாழ்க்கைக்காக கோயிலை சிதைத்து வருகின்றனர். கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடி பக்தர்கள் அங்கு நின்று நடராஜரை வணங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், தீட்சதர்களால் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இயக்குநர் கௌதமன் மனு

அதேபோல் 2009ஆம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகள் இந்துசமய அறநிலையத்துறை வசம் கோயில் இருந்த போது வருமானமாக பெறப்பட்ட 3 கோடி ரூபாய் காணிக்கை என்ன ஆனது என்று தெரியவில்லை. கோயிலில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அனைத்து தரப்பினரையும் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லம் அரசுடைமை உத்தரவு செல்லாது - சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.