நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சிதம்பரம் நடாராஜர் ஆலயத்தின் ராஜ கோபுரத்தில் தீட்சிதர்களின் சார்பில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது.
வேறு எந்த ஆலயத்திலும் இல்லாதவிதமாக, ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்துக்கும் சிதம்பர நடராஜர் ஆலயத்தில்தான் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது.
அந்த வழக்கம் இந்தாண்டும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது. தீட்சிதர்களில் பலர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள். போர்க் காலங்களில், நாட்டுக்காகப் பொன் தந்தவர்கள்.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம்: கோயம்புத்தூர் தியாகிகளின் வாரிசுகள் கருத்து!