கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்தச் சிறைச்சாலையில் கஞ்சா, ஆயுதங்கள், செல்போன் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கைதிகள் வைத்திருப்பதாக தகவல் வந்தது.
மேலும், சிறையில் கைதிகள் ஆணிகளை வைத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்யும் சம்பவமும் அடிக்கடி நடப்பதால் இதனை தடுக்கும் விதமாக சிறையில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை இன்று காலை 6 மணியளவில் தொடங்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது, சிறைக் கைதிகளிடம் இருந்து செல்போன் சிம்கார்ட், டீஸ்பூனால் செய்யப்பட்ட கத்தி மற்றும் ஏராளமான ஆணிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து சிறைக் கைதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: விடுதலை புலிகள் மீதான தடையை நீட்டிப்பதே மத்திய அரசின் குறிக்கோள்: வைகோ குற்றச்சாட்டு
இதையும் படிங்க: விடுதலை புலிகள் மீதான தடையை நீட்டிப்பதே மத்திய அரசின் குறிக்கோள்: வைகோ குற்றச்சாட்டு