கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் உள்ள முனியப்பன் சன்னதியில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை மனுவாக எழுதி கட்டினால் 90 நாட்களில் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள்.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சித்தி விநாயகர் குழந்தைக்கு பால் தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டதைதொடர்ந்துசிவாச்சாரியர்கள் சிவ மந்திரங்களை ஓதி கொடியேற்றினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.