ETV Bharat / state

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் நோயாளி போராட்டம்!

கடலூர் : சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் நோயாளி ஒருவர், டயாலிசிஸ் செய்யப்படுவதில்லை என்று குற்றச்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cuddalur-mediacal-college
cuddalur-mediacal-college
author img

By

Published : Feb 13, 2021, 8:24 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம், அண்ணாமலை பல்கலைகழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கும் வசதி உள்ளது. இதில் டயாலிசிஸ் பிரிவு கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இம்மருத்துவனையில் கடந்த பல மாதங்களாக ஆயங்குடி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் புகாரி(28) என்பவர் டயாலிசிஸ் செய்து வந்தார். இந்தநிலையில் இன்று டயாலிசிஸ் செய்ய சென்ற அவரை மருத்துவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் ஏழ்மை நிலையில் உள்ளதால் வேறு எங்கும் சென்று வைத்தியம் பார்க்க இயலாது. என் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி திடீரென போராட்டத்தை நடத்தினார்.

இதையடுத்து, மருத்துவமனை தரப்பில் இதுகுறித்து கூறும்போது, "கடந்த ஐந்து நாள்களாக தான் டயாலிசிஸ் பிரிவு இயங்கவில்லை" என தெரிவித்தனர். ஆனால் நோயாளிகள் தரப்பில் ஒரு வருடத்திற்கு மேலாக இந்த பிரிவு இங்கு இயங்குவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: வெலிங்டன் கண்டோன்மென்ட்டில் ரூ.53 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.