ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் 2ஆவது வியாழக்கிழமையன்று உலக தர தினம் "தூய்மை பேணுவோம் சுகாதாரம் காப்போம்" என்ற அடிப்படையில் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் தேசிய வளர்ச்சி மற்றும் செழிப்பினை மக்களின் பங்களிப்புடன் உயர்த்துவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உலகளவில் எடுத்துரைப்பது நோக்கமாகும்.
அதனடிப்படையில் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் பயிற்சிபள்ளி மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் வெ. அன்புச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணி அரசு தலைமை மருத்துவமனை வளாக பகுதிகளில் சென்று "தூய்மை பேணுவோம் சுகாதாரம் காப்போம்" என்று செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் முழக்கமிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதனை தொடர்ந்து அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு, மாவட்ட தொடக்க இடையீட்டு சேவைகள் மைய கட்டடம், அம்மா உணவகம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய் லீலா, நிலைய அலுவலர் குமார், ரத்த வங்கி அலுவலர் ஹபிசா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: தாய்-சேய் இறப்பு விகிதக் குறைப்பில் இந்தியாவின் பங்கு என்ன?