ETV Bharat / state

டிக்டாக்கில் காதலா? திடீரென்று மாயமான கணவர் ... மனைவி புகார்! - cuddalore crime news

கடலூர்: டிக்டாக்கில் வேறு பெண்களுடன் காணொலி வெளியிட்டு தலைமறைவாக இருக்கும் எனது கணவரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

டிக்டாக்
டிக்டாக்
author img

By

Published : Jan 21, 2020, 7:30 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு மனைவி சுகன்யா, தர்ணிகா(3) பெண் குழந்தையும் உள்ளது. ஆனால், கணவர் ராஜசேகர் குடித்துவிட்டு சுகன்யாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதுமட்டுமின்றி பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கருதிய மனைவி சுகன்யா பண்ருட்டி காடாம்புலியூர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் இருவரையும் அழைத்து பேசிய காவல் துறையினர், சமாதானப்படுத்தி அனுப்பினர். மேலும், கிராமத்து பஞ்சாயத்தில் ராஜசேகர் இனி சுகன்யாவை அடிக்க மாட்டேன், துன்புறுத்த மாட்டேன் எனக் கடிதம் மூலம் ஒப்புதல் கொடுத்துள்ளார்.

இனிமேலாவது நமது வாழக்கை நலமாக போகும் என்ற நினைத்த சுகன்யாக்கு மீண்டும் சோதனை கிளம்பியது. முன்பு போலவே, ராஜசேகர் தொடர்ந்து சுகன்யாவை குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்தியுள்ளார். அதன்பின்னர், டிக் டாக் செயலியில் பல பெண்களுடன் ஜாலியாக டிக்டாக் செய்து வந்துள்ளார். இதைப் பார்த்து கடுப்பான சுகன்யா, டிக் டாக் செய்யாதிர்கள் எனக் கூறியதற்கு, நான் அப்படித்தான் செய்வேன் என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி சுகன்யாவை அடித்துள்ளார். இதை தொடர்ந்து, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ராஜசேகர் பல நாட்களாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. அவர்மீது உள்ள கோபத்தினால், ராஜசேகரை சுகன்யாவும் தேடவில்லை.

மனைவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

இந்நிலையில், புதுக்கோட்டையில் கவிநயா என்னும் பெண் காணவில்லை என அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில், விசாரணை தொடங்கிய காவல் துறையினர், கவிநயா தொலைபேசி எண்ணை ஆய்வு செய்ததில், ராஜசேகருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, ராஜசேகர் பெற்றோர்களிடமும், மனைவியிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, ராஜசேகர் பல நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என்ற தகவல் காவல் துறைக்கு தெரியவந்தது.

டிக்டாக்

இந்த விசாரணையின்போது, கவிநயா ராஜசேகருடன் எடுத்துக்கொண்ட டிக்டாக் காணொலியை வெளியிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி சுகன்யா மற்றும் காவல் துறையினர், கவிநயா ராஜசேகரும் திருமணம் செய்து கொண்டார்களா என்ற கேள்வி கிளம்பியுள்ளது. மேலும், அறந்தாங்கி காவல்துறையினர் விசாரித்து வருகின்ற சூழ்நிலையில் தற்போது ராஜசேகரின் மனைவியான சுகன்யா கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்விடம் புகார் மனு அளித்தார். அதில், பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் ராஜசேகரை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல தரப்பிலிருந்து எனக்கும் என் மூன்று வயது குழந்தைக்கும் மிரட்டல் வருகிறது எனவே உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

டிக் டாக் செயலி மூலம் நடக்கும் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது என்ற கேள்வி மக்கள் மனதில் உள்ளது.

இதையும் படிங்க: வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் நகைக் கொள்ளை!

Intro:டிக் டாக்கில் பழகிய பெண்ணுடன் கணவர் ஓட்டம் மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்
Body:கடலூர்
ஜனவரி 21,

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் இவருக்கும் கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. இவர்களுக்கு மூன்று வயதில் தர்ணிகா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவர் ராஜசேகர் குடித்துவிட்டு சுகன்யாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மனைவி சுகன்யா பண்ருட்டி காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரித்த போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை செய்து சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். மேலும் கிராமத்து பஞ்சாயத்தில் ராஜசேகர் இனி சுகன்யாவை அடிக்க மாட்டேன் துன்புறுத்த மாட்டேன் என கடிதம் மூலம் ஒப்புதல் கொடுத்து உள்ளார்.

ஆனால் ராஜசேகர் தொடர்ந்து சுகன்யாவை குடித்து வந்து அடித்து துன்புறுத்தியுள்ளார். டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அதிகம் ஈர்ப்பு கொண்ட ராஜசேகர் பல பெண்களுடன் டிக்டாக்கில் மோகத்தில் ஈடுபட்டார் டிக்டக் செயலில் ஈடுபட வேண்டாம் என சுகன்யா தொடர்ந்து கூறியுள்ளார் நான் அப்படித்தான் செய்வேன் என்னை ஒன்னும் உன்னால் பண்ண முடியாது எனக் கூறி சுகன்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்

பின்னர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ராஜசேகர் இன்னாள் வரைக்கும் வீடு திரும்பவில்லை

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கவிநயா என்னும் பெண்ணை காணவில்லை என கவிநயாவின் உறவினர்கள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் புகாரை விசாரித்த அறந்தாங்கி காவல்துறையினர் தொலைபேசி எண் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து விசாரணை செய்ததில் ராஜசேகருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. அறந்தாங்கி காவல்துறையினர் ராஜசேகர் சொந்த ஊரான மேலிருப்பு மற்றும் மனைவியின் சொந்த ஊரான கிழிருப்பு ஊருக்கு வருகை தந்து மனைவி சுகன்யா விடமும் ராஜசேகரின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினர்.சுகன்யா அந்த காவலரிடம் ஏன் என் கணவரை தேடி வந்து இருக்கீங்க என்ன காரணம் என கேட்டதற்கு ராஜசேகர் புதுக்கோட்டையைச் மாவட்டத்தைச் சேர்ந்த ஜவுளிக்கடையில் பணியில் இருந்த கவிநயா என்ற பெண்ணை கடத்தி விட்டார் என அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தங்களுக்கு தகவல் தெரியுமா என கேள்வி எழுப்பினர் இந்தநிலையில் ராஜசேகரன் மனைவி தன் கணவர் வேலைக்கு செல்வதாக என்னிடம் கூறி சென்றார் ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை என போலீசாரிடம் கூறியுள்ளார்

காணாமல் போன கவிநயா மற்றும் ராஜசேகர் ஒன்றாக இணைந்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர் இதனை பார்த்த போலீசார் இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா என கேள்வி எழுப்பினர்.

இந்தநிலையில் அறந்தாங்கி காவல்துறையினர் விசாரித்து வருகின்ற சூழ்நிலையில் தற்போது ராஜசேகரின் மனைவியான சுகன்யா கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார் இதில் தனது கணவர் ராஜசேகர் ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பில் உள்ளார் இதனை கண்டித்து காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் அப்போது பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பினர் ஆனால் தற்போது மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கவிநயா என்ற பெண்ணை டிக் டாக் மூலம் பழகி திருமணம் செய்து கொண்டுள்ளார் இதே போல் இன்னும் பல பெண்களுடன் தொடர்பில் உள்ளார் எனவே டிக்டாக் மூலம் பல பெண்களை ஏமாற்றி சீரழித்து வரும் கணவர் ராஜசேகரை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பல பெண்களை சீரழிக்கும் டிக் டாக் செயலியை உடனடியாக தடை செய்ய வேண்டும் பல தரப்பிலிருந்து எனக்கும் என் மூன்று வயது குழந்தைக்கும் மிரட்டல் வருகிறது எனவே உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்யிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.