கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகர், பூந்தோட்ட சாலையை சேர்ந்தவர் வீரா என்கிற வீரங்கன் (35). பிரபல ரவுடியான இவரை, கடந்த 16ஆம் தேதி இரவு ஒரு கும்பல் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த கொலை வழக்கில், மார்கெட் காலனியைச் சேர்ந்த அருண்பாண்டியன் (27), குப்பன் குளத்தைச் சேர்ந்த சுதாகர் (23), சுவாமிநாதன் (30), ஸ்டீபன் (எ)ஸ்டீபன்ராஜ், ஜீவா (எ) ஜீவானந்தம், விக்கி (எ) விக்ரம், ராக்கி, ரமணன், ராஜசேகர் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி A1 கிருஷ்ணன் காவல்துறையினர் எண்கவுன்டரில் இறந்தார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அருண்பாண்டியன், சுதாகர், சுவாமிநாதன் இவர்களின் குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஸ்ரீ அபிநவ் பரிந்துரைனர். இதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியம், ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு முன்னரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது பிணையில் வராத அளவு குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே தவணையில் நியாய விலைப் பொருள்கள்’ - நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் உத்தரவு!