கடலூர்: 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடலூரைச் சேர்ந்த 5 வயது சிறுமியை ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட நபரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் நேற்று (30.11.2021) நீதிபதி எம்.எழிலரசி தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதனையடுத்து, அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டச் சிறுமிக்கு கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் நல நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் 30 நாள்களுக்குள் பெற்று வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது