வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள நிவர் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 7 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 24) காலை முதல் அவ்வப்போது மழை விட்டுவிட்டு பெய்த வண்ணம் உள்ளது.
இதனால், தற்சமயம் மழைநீர் தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு வழியாக கடலில் கலக்கின்றது. அப்படி கலக்கும் பொழுது தண்ணீர் அதிகளவில் கடலுக்குச் செல்ல வேண்டும் என்பதால் தென்பெண்ணை ஆறு மற்றும் கெடிலம் ஆற்றின் முகத்துவரங்களை வெட்டும் பணி நடைபெற்றது.
இதன்மூலம் தண்ணீர் எளிதாக கடலுக்கு அனுப்பப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நிவர் புயல் எதிரொலி: பேரிடர் மீட்பு குழு புதுச்சேரி வருகை