கடலூரில் நாம் தமிழர் கட்சியின் மக்களவை வேட்பாளரான சித்ரா ஈடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
- கரும்பு விவசாயிகளுக்கு மானிய முறையில் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
- விருத்தாசலத்தில் பீங்கான் தொழில் நலிவுற்று இருப்பதால் அதை விரிவுப்படுத்தி இம்மண்ணில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்
- கடலூரில் இருந்து புதுச்சேரி வரையிலும் ரயில்வே போக்குவரத்திற்கு வசதி செய்யப்படும்.
- நெய்வேலி என்எல்சி தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள் அவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
- கடலூர் அரசு மருத்துவமனைக்கு தரமான மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்படும்.
- அரசு கல்வியைப் பொருத்தவரை ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை மாணவர்களுக்கு தரமான அரசு கல்வி கொண்டுவரப்படும்.
- கடலூரில் புறவழிச்சாலைகளும் கொண்டுவரப்படும்.
மேலும் கடலூரில் இயங்கிவரும் சிப்காட் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகை மற்றும் கழிவுநீர் கடலில் கலப்பதால் மீன்கள் பாதிப்படைகிறது. இதனால் மீனவர்கள் நலம் பாதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சீர் செய்யப்படும் என்று தெரிவித்தார்.