ETV Bharat / state

கடலூர் எம்பி ரமேஷுக்கு நவ. 9 வரை நீதிமன்ற காவல்!

author img

By

Published : Oct 27, 2021, 4:17 PM IST

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் சிறையில் உள்ள கடலூர் திமுக எம்பி ரமேஷுக்கு நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் எம்பி ரமேஷுக்கு நவ. 9 வரை நீதிமன்ற காவல்

கடலூர்: பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம் கிராமத்தில் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்த கோவிந்தராஜ் என்பவர் செப்டம்பர் 19 ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு செப்டம்பர் 28ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் எம்பி ரமேஷ், அவரது ஊழியர்கள் ஐந்து பேர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து எம்பி ரமேஷ் உட்பட ஆறு பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நவ. 9 ஆம் தேதி வரை சிறை

ஊழியர்களான நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, வினோத், சுந்தராஜன் ஆகிய ஐந்து பேரை சிபிசிஐடியினர் கைது செய்த நிலையில், எம்பி தலைமறைவாக இருந்தார். பின் அக்டோபர் 11 ஆம் தேதி எம்பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அக்.13 ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் எம்.பி ரமேஷ் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அக்.24 ஆம் தேதி தள்ளுபடி செய்தது நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று (அக்.27) 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் எம்.பி ரமேஷை சிபிசிஐடி காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது ரமேஷின் நீதிமன்ற காவலை நீட்டித்து வழக்கு விசாரணையை நவம்பர் 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார். இதையடுத்து எம்.பி ரமேஷ் மீண்டும் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: இரண்டு அரசுப் பள்ளிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.