உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.அந்த வகையில் கடலூரில் நேற்று (ஆக.25) வரை கரோனா தொற்றால் 9 ஆயிரத்து 512 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஆக.26) மேலும் 286 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 798 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 ஆயிரத்து 494 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர் விருத்தாசலம் சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வரை 6 ஆயிரத்து 592 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்று (ஆக.26) மேலும் 330 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 922 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றால் இன்று (ஆக.26) மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.