வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு 'நிவர்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் காரனமாக கடலூர் துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் பகுதிகளில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன் மாவட்டங்களில் பல இடங்களில் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது.