கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு படையெடுத்து வருவதால், படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகள் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வருவதால், மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல், மருத்துவமனை வளாகம் மற்றும் வராண்டாக்களில் படுக்கவைக்கப்பட்டு மருத்துவம் பார்த்து வந்தனர்.
இந்நிலையில் மேற்கொண்டு கரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு அதிகமாக வருவதால், ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளை படுக்கவைத்து வைத்தியம் பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் சென்ற முறை போல் தனியார் கல்லூரிகளிலும், தனியார் பள்ளிகளிலும் படுக்கை வசதிகள் செய்து கொடுத்து நோயாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
இதையும் படிங்க:கரோனாவை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" - கடலூர் மாவட்ட புதிய ஆட்சியர் வேண்டுகோள்!