ETV Bharat / state

காதில் விஷம் ஊற்றி இளம்பெண் தற்கொலை - girl suicide attempt poision

கடலூர்: திட்டக்குடி அருகே இளம்பெண் காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காதில் விஷம் ஊற்றி இளம்பெண் தற்கொலை
காதில் விஷம் ஊற்றி இளம்பெண் தற்கொலை
author img

By

Published : Jan 5, 2020, 3:02 PM IST

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன்-தனலட்சுமி தம்பதி. இவர்களுடைய மகள் இந்துமதி (18) வீட்டு வேலை செய்யாமல் இருந்துவந்துள்ளார். இதை அவரது தாயார் தனலட்சுமி கண்டித்துள்ளார்.

இதையடுத்து இளங்கோவனும், தனலட்சுமியும் மளிகைப் பொருள்கள் வாங்க கடைவீதிக்குச் சென்றுள்ளனர். பின்னர், திரும்பி வீட்டிற்குவந்து பார்த்தபோது இந்துமதி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகள் அருகில் சென்றுபார்த்ததில் அவர் தனது காதில் வி‌‌ஷத்தை ஊற்றி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

உடனே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல் இந்துமதியின் உடலை அவரது பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் சுடுகாட்டிற்கு கொண்டுசென்று இறுதிச்சடங்கை முடித்துவிட்டு உடலை எரித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடல்மீது எரிந்த தீயை அணைத்து, அதனைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கடனை திருப்பி தராததால் கொலை

Intro:காதில் விஷம் ஊற்றி இளம்பெண் தற்கொலைBody:கடலூர்
ஜனவரி 5,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் விவசாயி. இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுடைய மகள் இந்துமதி(18). இவர் வீட்டு வேலை செய்யாமல் இருந்துள்ளார். இதைபார்த்த தனலட்சுமி அவரை கண்டித்துள்ளார். இதையடுத்து இளங்கோவனும், தனலட்சுமியும் மளிகை பொருட்கள் வாங்க கடைவீதிக்கு சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இந்துமதி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர் தனது காதில் வி‌‌ஷத்தை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இந்த நிலையில் இது குறித்த தகவலை காவலருக்கு தெரிவிக்காமல் இந்துமதியின் உடலை எரிப்பதற்காக அவரது உறவினர்கள் அங்குள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அவர்கள் செல்வதற்குள் இந்துமதியின் உடலை சுடுகாட்டில் சிதையில் வைத்து எரியூட்டினர். இதில் அவரது உடல் எரிய தொடங்கியது. இந்த நிலையில் அங்கு சென்ற காவல்துறையினர் தீயை அணைத்து இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
*No photo*

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.