கடலூர் : தமிழ்நாட்டில் நேற்று 30 ஆயிரத்து 208 நபர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஏழு நபர்களுக்கும் என 30,215 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
மேலும், திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், அரசு அலுவலர்களும் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தொடர் காய்ச்சல் காரணமாக நேற்று(ஜன.24) காலை கரோனா பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அலுவலர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.