கடலூரில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்களுடன் கூடிய மருத்துவக் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடலூர் மாவட்டத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் மருத்துவர்கள் சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்களுடன் இயங்கக் கூடிய மருத்துவக் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தேவையான கரோனா வைரஸ் தொடர்பான சந்தேகங்களைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
மேலும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம். ஆகையால் பொதுமக்கள் இதனை ப்பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை: களத்தில் இறங்கிய பஞ்சாயத்து தலைவர்கள்