ETV Bharat / state

கரோனா தொற்று: கடலூரில் ஒருவர் உயிரிழப்பு - cuddalore district News

கரோனா வைரஸ் தொற்றால் 38 வயது நபர் இன்று கடலூரில் உயிரிழந்தார்.

cuddalore
cuddalore
author img

By

Published : Jun 8, 2020, 11:10 PM IST

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில் ஜூன் 30ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் நேற்றுவரை கரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 487ஆக இருந்தது. இன்று மேலும் 2 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 489 ஆக உயர்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தடுப்பு கட்டைகள் அமைத்து சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கிட்டு தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை கடலூர், சிதம்பரம், விருதாசலம், சிதம்பரம் முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அண்ணாகிராமத்தை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.