கடலூர்: நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் உயர்ந்த வண்ணமே உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் பலரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரிக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, தற்போது அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.