ETV Bharat / state

அமமுக சின்னத்திற்கு பட்டன் இல்லை - வேட்பாளரின் பகிரங்க கடிதம்!

கடலூர்: பண்ருட்டி அருகே திருவதிகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அமமுகவின் பரிசுப்பெட்டி சின்னத்திற்கான பட்டன் இல்லாததால், அந்த வாக்குச்சாவடிக்கான தேர்தலை மற்றொரு நாளில் நடத்த அமமுக வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

பரிசுப்பெட்டி சின்னத்திற்கான பட்டன் இல்லை
author img

By

Published : Apr 18, 2019, 4:45 PM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பண்ருட்டி அருகே திருவதிகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அமமுகவின் பரிசுப்பெட்டி சின்னத்தில் வாக்களிப்பதற்கான பட்டன் இல்லாததை கண்டு வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

பரிசுப்பெட்டி சின்னத்திற்கான பட்டன் இல்லை

இதனையடுத்து கடலூர் மக்களவைத் தொகுதியின் அமமுக வேட்பாளர் தங்கவேல் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அந்த வாக்குச்சவடிகளில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்துமாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி நகரம் பூத் எண்.210, நகராட்சி உயர்நிலைப் பள்ளி வாக்குசாவடியில் எண்.16-ல் எங்கள் சின்னத்திற்கு (பரிசுபெட்டி) வாக்களிக்கும் பட்டன் இல்லை. இதனால் அந்த வாக்குசாவடியில் மட்டும் தேர்தலை நிறுத்தி மற்றொரு நாளில் தேர்தல் நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வேட்பாளர்
அமமுக வேட்பாளரின் கடிதம்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.