கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவரின் மகன் யோகராஜன் (31). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமண செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி கடத்திச் சென்றதாக, அச்சிறுமியின் தாயார் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின் காவல் துணை ஆய்வாளர் சந்துரு தலைமையில் தனிப்படை அமைத்து யோகராஜன், சிறுமியைக் கண்டுபிடிக்கப்பட்டு திட்டப்படி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறுமியை கடத்தி சென்ற யோகராஜனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 'போக்சோ வழக்குகளில் சமரசத்தில் ஈடுபடும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை' - துணை ஆணையர்