கடலூர்: வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வாய்க்கால்கள் வழியாகத் தண்ணீர் ஓடும் நிலையில் அதில் முதலை, பாம்பு உள்ளிட்டவை பல்வேறு இடங்களிலும் அடித்து வரப்படுகின்றன.
இந்த நிலையில் கடலூர் அருகே வெள்ளக்கரை ஆரம்பச் சுகாதார நிலையத்தின் பின்புறம் நள்ளிரவில் ஒரு முதலை செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இந்த முதலை ஆரம்பச் சுகாதார நிலையம் அருகில் ஒரு புதரில் சென்று மறைந்த நிலையில் உடனடியாக அவர்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
கடலூர் வனச்சரகர் அப்துல் ஹமீது மற்றும் வன ஆர்வலர் செல்லா உள்ளிட்டோர் வெள்ளக்கரை ஆரம்பச் சுகாதார நிலையத்தின் அருகே சென்று அந்த முதலை இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர்.
8 அடி நீளமும், 200 கிலோ எடையும் கொண்ட அந்த முதலை மீது வலையை வீசிய நிலையில் முதலை ஆக்ரோஷமாக வாயைத் திறந்து அவர்களைக் கடிக்க முயன்றது.
பின்னர் அதனைக் கட்டி கடலூர் வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். நள்ளிரவில் ஊருக்குள் முதலை புகுந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
இதையும் படிங்க: பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு எப்போது? - கடுகடுத்த ஓ.பன்னீர்செல்வம்