ETV Bharat / state

நல்லகண்ணுவை களங்கப்படுத்தி செய்தி - பாஜகவுக்கு எதிராக சிபிஐ ஆர்ப்பாட்டம் - பாஜகவுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கடலூர்: கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மற்றும் மூத்த தலைவர் நல்லகண்ணு களங்கப்படுத்தி செய்தி வெளியிட்ட பாஜகவினரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

CPI protest against BJP
பாஜகவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jul 22, 2020, 2:00 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கடலூரிலுள்ள தலைமைத் தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் என். சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தை இழிவுபடுத்தி படங்கள் மற்றும் செய்தி வெளியிட்ட பாஜகவினரைக் கண்டித்தும், கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை களங்கப்படுத்திய நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழுங்கினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக நகரச் செயலாளர் செந்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜெயராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சமூக ஊடகங்கள் மூலம் அவதூறு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.